Meendum kavitaigal....
எங்கோ ஓருவன் ஏகாந்தமாய் வாசிக்கும் குழலோசை
என் காதுகளுக்கு கேட்கிறது – உன் குரலாய்
என் கண்மணியே கடமைகள் பல காத்திருக்கின்றன
இரவல் வாங்கிச் சென்ற என் இதயத்தை
இன்றே திருப்பித் தந்துவிடு....
உன் நிழலைக் கூட நிற்கவிடமாட்டேன் என்றேன்
நான் – ஆனால் நீயோ என்னைக் கூட உன் நினைவில்
நிறுத்த மறந்ததேனடி
நம் காதலுக்கு மணவோலை எழுதக் கேட்டேன்
ஆனால் நீயோ நம் நட்புக்கும் சேர்த்தல்லவா
மரணவோலை எழுதி வைத்தாய்.....
இந்த பாழாய்ப் போன காதல் கவிதைகள் தவிர
நான் பெற்ற கற்பூர மண்டைக்குள்
வேறெந்தக் கவிதையும் கருக்கொள்ள மறுக்கின்றது
உங்களைப் போல நானும் காத்திருக்கின்றேன்
கருத்துறு கவிதையை என் கரங்கள் வாயிலாய்
பிரசவிப்பதற்க்கு
0 Comments:
Post a Comment
<< Home