The words I wish to follow....!!!!!!!!!
தெய்வத்தின் குரல்
தினமும் தூங்கப் போகும் முன்பு இன்று ஜன சமுதாயத்துக்கு நாம் ஏதாவது கைங்கர்யம் பண்ணினோமா என்று கேட்டுக் கொள்ள வேண்டும். அந்த மாதரி நாம் பரோபகாரம் பண்ணாமல் ஒரு நாள் போயிற்று என்றால், அது நாம் பிறவாத நாளே.
Please try to avoid the following evil acts...at any cost....!!!!!!!please....!!!
நல்லோர் மனது நடுங்க
நட்டாற்றில் கை நழுவ விட்டேணோ...
வலிய வழக்கிட்டு மானங்கெடுதேணோ...
வரவு போக்கொழிய வழியடைத்தேணோ...
தானம் கொடுப்போரை தடுத்து நின்றேணோ...
தருமம் பாராது தண்டஞ் செய்தேணோ..
கலந்த சினேகிதரை கலகஞ் செய்தேணோ...
களவு செய்வோருக்கு உளவு சொன்னேணோ...
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேணோ...
மண்ணேரம் பேசி வாழ் அழித்தேணோ...
குடிவரி உயர்த்தி கொள்ளை கொண்டேணோ...
குடிக்கின்ற நீருடைய குளத்தை தூர்த்தேணோ...
ஏழைகள் வயிறு இரையச் செய்தேணோ...
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்றேணோ...
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேணோ...
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேணோ...
பொருளை இச்சித்து பொய் சொன்னேணோ...
பொது மண்டபத்தை போயிடித்தேணோ...
ஆசை காட்டி மோசம் செய்தேணோ...
அன்புடையவர்க்கு துன்பம் செய்தேணோ...
வேலையாட்குக் கூலி குறைத்தேணோ...
வெய்யிலூக்கு ஓதுங்கும் விருஷத்தை அழித்தேணோ...
பசித்தோர் முகத்தை பாராதிருந்தேணோ...
பகை கொண்டு அயலோர் பயிரை அழித்தேணோ...
கோள் சொல்லி குடும்பங் கலைத்தேணோ...
கலங்கி ஓளிந்தோரைக் காட்டி கொடுத்தேணோ...
கற்பழிந்தவளை கலந்திருந்தேணோ...
கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேணோ...
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேணோ...
கருப்ப மழித்துக் களித் திருந்தேணோ...
கற்றவர் தம்மை கடுகடுத்தேணோ...
கன்றுக்கு பாலூட்டாது கட்டி வைத்தேணோ...
குருவை வணங்க கூசி நின்றேணோ...
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேணோ...
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேணோ...
பெரியோர் பாட்டில் பிழை சொன்னேணோ...
கல்லும் நெல்லும் கலந்து விற்றேணோ...
தவம் செய்வோரைத் தாழ்வு சொன்னேணோ...
ஆலையக் கதவை அடைத்து வைத்தேணோ...
சிவனடியாரை சீறி வைதேணோ...
சுத்த ஞாநிகளை தூஷணம் செய்தேணோ...
மாதாபிதாவை வைது நின்றேணோ...
தந்தை தாய் மொழியை தள்ளி நடந்தேணோ...
தெய்வத்தை இகழ்ந்து செருக்கடைந்தேணோ...
என்ன பாதகம் செய்தேணோ....?
0 Comments:
Post a Comment
<< Home