யாரடி-நீ?
யாரடி-நீ?
மடிசாரும் சுடிதாரும்
மயக்காத என் மனதை;
ஜீன்ஸும் டி-சர்ட்டும்
திருடாத என் இதயத்தை;
பாவாடைத் தாவணியிள்
பறித்தவளே யாரடி-நீ?
முகம் காட்டியே என்னிடம் விளையாடுகிறாய்
கண்ணாம்பூச்சி – முகவரி காட்டாமல்
யாரடி-நீ?
கண்களால் காதல் தீ வளர்த்தோம்
கனவினில் காதல் யாகம் புரிந்தோம்
விரல்களால் தீண்டும் இன்பம் பெற்றோம்
விரைவினில் இளமை விரதம் முடிப்போம் யாரடி-நீ?
கதிரவனைக் காணாத பனித்துளியோ நீ?
கால் பாதம்படாத புல்வெளியோ நீ?
யாரடி-நீ?
விரல்களால் என் நெஞ்சைக் கிழித்தாய்
விழிகளால் காதல் நஞ்சைக் கொடுத்தாய்
இதழ்களால் என் மூச்சை நிறுத்தி
இறுதியில் காதல் போர் தொடுத்தாய் யாரடி-நீ?
வண்டிற்கும் கிடைக்காத தேன்சுனையோ நீ?
பல்லவன் செதுக்க மறந்த பனிச்சிற்பமோ நீ?
பால்வெளி மண்டலத்தில் பிறந்தவளோ நீ யாரடி-நீ?
காதலால் என்னை பேதலிக்கச் செய்யும் நீ யாரடி?
0 Comments:
Post a Comment
<< Home