என் நெஞ்சின் ஆழத்தில்
பிச்சைக்காரியும் காத்திருக்கிறாள்
சிவப்பு விளக்கிற்க்கு
கைகுழந்தையுடன் காசு கேட்பதற்கு!
- இப்படி ஒரு ஹைக்கூ ஒரு முறை வால்வோ பேருந்தில் இருந்து நெருக்கடி மிகுந்த ஒரு பூனே சந்திப்பில் என் நினைவில் வந்து சென்றது.
பின்னர் ஏனோ மறந்துவிட்டது.
சமீபத்தில் 'சிவாஜி' படத்தில் கூட இது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.
பின்னர் ஒரு தோழி அனுப்பிய மின்னஞ்சலில் இந்த புகைப்படத்தைக் கண்டதும் ஏனோ மீண்டும் மனதில் ஒரு நெருடல்.
மழையின் ஸ்பரிசமும்
தாய் மடியின் கதகதப்பும்
குட்டிக் குழந்தையின்
சுட்டிப் பார்வையும்
என் நெஞ்சின் ஆழத்தில்
ஈட்டியாய்ப் பாய்ந்து
கண்களின் ஓரத்தில்
ஈரமாய் எட்டிப்பார்த்து!
0 Comments:
Post a Comment
<< Home