Sunday, February 03, 2008

சிறகிழந்த பறவைகள்!

வெறுப்பை மறக்க
நெறுப்பை சுவைக்கும்
வேடிக்கைக் கூட்டம் - ஓருபுறம்!

இவர்கள் இரவாதவர்களுக்கும்
இலவசமாய் நோய் பரப்பும்
வள்ளல் குடும்பம்!

புண்பட்ட நெஞ்சத்தை மட்டுமல்ல
புதுபுது நட்பையும்
புகை விட்டே ஆற்றுவார்கள்!

இப்படி தெரிந்தே
தவறும் / தொடரும்
மனிதர்களுக்கு மத்தியில்;

தெரியாத இருட்டில்
தூரத்து தனிமையில்
துணையிழந்த துக்கத்தில்
வாடகைக் கொடுத்து
வேதனை வாங்கிய
அபா(யோ)க்கியவான்கள் - நீங்கள்!

ஆரம்பத்தில் துடித்தாளும்
துவண்டளும், அழது புரண்டு
அரண்டாளும்
விடியாது உங்கள் இரவு!

இறப்பு நாளின் பிறப்பை
எதிர் நோக்கி உயிரை
இருப்பு வைத்திருக்கும்
நிரந்தர கர்ப்பிணிகள் - நீங்கள்!

வெள்ளையனை வெளியேற்ற
போரடினோம் - அன்று
கூட்டுமுயற்சி - உதவியது!
இரத்தத்தில்
வெள்ளையணு வெளியேற்றத்தால்
போரடுகிறீர்கள் - இன்று
கூட்டுசிகிச்சை - உதவும்!

வருந்தி வாடினாலும்
திருந்தி வாழநினைக்கும்
வாழ்க்கையே - பரிகாரம்!
உங்களுக்கு மட்டுமல்ல
உங்களைப் பார்ப்பவர்களுக்கும்!

தீண்டாமைக் கொடுமையின்
பரிணாமக் கைதிகளாய்
நீங்கள் அடைக்கப்படும்முன்-

சிறகிழந்த பறவைகளாய்
எங்கள் அன்புக் கூட்டுக்குள்
அடி எடுத்து வையுங்கள்!

ஆதரவுக் கரங்கள்
ஆயிரம் உங்கள்
ஆயுளை அடைக்காக்கட்டும்!

சத்தான உணவும்
சமத்தான குணமும்
நிச்சயம் உதவும் - உங்கள்
எஞ்சிய நாட்களை
சிறப்பாய் செலவிட!

(c) Balaji 2007

0 Comments:

Post a Comment

<< Home

Search Engine Submitter

My Photo
Name:
Location: chennai, Tamilnadu, India

An introvert turned ..... Average human being...

Powered by Blogger

Enter your email address below to subscribe to breezer!


powered by Bloglet