Sunday, June 17, 2007

Really shocking!

Below is the excerpt taken from Kumudam reporter:

பத்து மாதம் பொத்திப் பொத்தி வைத்துப் பாதுகாத்த கர்ப்பம்... பிரசவ வலி ஏற்படுகிறது... மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார் அந்த கர்ப்பிணிப் பெண். இயற்கையான முறையில் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளச் சம்மதித்து, கையெழுத்துப் போட்டு விட்டு ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே டென்ஷனோடு காத்திருக்கிறார் கணவர்.

‘சும்மாவா?... பிரசவம்ங்கிறது ஒரு பொண்ணுக்கு மறுஜென்மம் மாதிரி...’ என்று வெளியில் காத்திருக்கும் பாட்டிகள், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அந்த ஆபரேஷன் தியேட்டருக்குள்... தன்னை நம்பி இரண்டு உயிர்களை ஒப்படைத்த குடும்பத்துக்கு அந்த டாக்டர் எந்தளவுக்கு உண்மையாக இருக்கிறார் என்பது தெரியுமா? தெரியாதுதான் என்றாலும், கடவுள் மேல் வைக்கும் நம்பிக்கைபோல் டாக்டர்கள் மீதும் நம்பிக்கை வைக்கிறார்கள் மக்கள்.

ஆனால், அந்த ஒரு சம்பவத்தில், குறிப்பிட்ட அந்த டாக்டர் என்ன செய்தார் தெரியுமா? தான் தள்ளி நின்று கொண்டு பத்தாவது படிக்கும் தனது மகனை விட்டு அந்த அறுவை சிகிச்சையைச் செய்ய வைத்தார். செய்ய வைத்தது மட்டுமன்றி, அதனை வீடியோ எடுத்து வைத்தும் பெருமைப்பட்டிருக்கிறார் அந்த டாக்டர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்த இந்தச் சம்பவம்தான், திருச்சி வட்டார மருத்துவர்களிடையே (மிக ரகசியமாக விவாதிக்கப்படும்) தற்போதைய ஹாட் டாபிக்.

After this what does that Dr. has to tell :
Please continue

இரண்டு நாட்கள் அலைச்சலுக்குப் பின்னர் மணப்பாறையில் உள்ள மாண்ட்போர்ட் பள்ளியில் தனது மகன் திலீபன்ராஜை ப்ளஸ் ஒன் சேர்த்து விட்டு வந்த அவரைப் பிடித்தோம். “இங்க லோக்கல்ல உள்ள ஐ.எம்.ஏ. மெம்பர்கள் பதவிப் போட்டியில் இப்படி என் மேல குறை சொல்லுறாங்க. நான் என் மகனுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ட்ரெயினிங் குடுத்திருக்கேன். சாதனை பண்றதா நெனச்சுத்தான் பண்ணுனேன். லோக்கல் ஐ.எம்.ஏ.யில உள்ளவங்களுக்கு என் டெவலப்மெண்ட்டுல விருப்பம் இல்ல. பத்து வயசுப் பையன் கார் ஓட்டுறான். அமெரிக்காவுல பதினைந்து வயசுப் பையன் டாக்டர் பட்டம் வாங்குறான். பொதுமக்கள், மருத்துவ அமைப்புகள் ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்காட்டியும் நான் என் மகனுக்கு ட்ரெயினிங் குடுத்திருக்கேன். அவன் சிசேரியன் செய்யும் திறமையுள்ளவன் என்பது உண்மைதான்.

சிலர் இது தவறுன்னு சொல்லுவாங்க. சிலர் இது சரின்னு சொல்லுவாங்க. அதைப்பத்தி நான் கவலைப்படலை.
ஒவ்வொரு ஆஸ்பத்திரியில ஆயாதான் டெலிவரியே பாக்குது. நான் ஸ்வீப்பரைக் கூட்டியாந்து ட்ரெயினிங் குடுக்கலை. எல்லாம் ஓர் அதிர்ஷ்டத்துல நடக்குது. நல்லாப் படிக்கிற என் மகனுக்குத்தான் ட்ரெயினிங் குடுத்தேன். எல்லாரும் ஒரு ஆஸ்பத்திரி கட்டிட்டு, தான் டாக்டரா ப்ராக்டிஸ் பண்ணிட்டு தன் புள்ளையையும் டாக்டராக்கி பின்னாளில் தனக்கு ஒரு வாரிசை உருவாக்குறாங்க. நான் அதைச் செய்யக் கூடாதா? நான் மணப்பாறையிலேயே ஹார்ட் ஆபரேஷன் பண்ணுனவன்’’ என்றார் அதிரடியாக.

நல்லமுறையில் மகப்பேறு முடியும் என்று நம்பி, இவரைத் தேடி வந்தவர்களுக்கு ஒரு கத்துக்குட்டிப் பையனை வைத்து இவர் சிசேரியன்கள் செய்தது அந்த கர்ப்பிணிகளுக்கும், உறவினர்களுக்கும் தெரிந்தால் என்ன நடக்கும்? மற்றவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சாதனைகள் செய்யப் போக, இவரோ மற்றவர்களின் உயிரைப் பணயம் வைத்து தன் மகனை சாதனையாளராக்கி இருக்கிறார். அந்த நிலையில் ஓர் அசாதாரண சூழ்நிலை உருவாகி, தாயின் உயிருக்கோ அல்லது குழந்தையின் உயிருக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால், இவரும் சர்வ சாதாரணமாக பில்லைப் போட்டு பணத்தை வாங்கிக் கொண்டு பிணத்தை ஒப்படைத்திருப்பார். சம்பந்தப்பட்ட உறவினர்களும் “டாக்டர் நல்ல டாக்டர்தான், விதி முடிஞ்சு போச்சு. என்ன பண்றது?’’ என்று புலம்பிக் கொண்டே வீட்டுக்குப் போயிருப்பார்கள். இது போன்ற டாக்டர்களை என்ன செய்வது?

Even if that Dr. has so much belief in the skills of his son then he should have got the consent of the patient. Will he ever dare to do this? Never!!He should have tested his son's capabilities by making him to operate on himself. I dunno how many such cases are still in force inbackward areas like Mannapparai.! Only God knows.!.

Courtesy : Kumudam reporter

Search Engine Submitter

My Photo
Name:
Location: chennai, Tamilnadu, India

An introvert turned ..... Average human being...

Powered by Blogger

Enter your email address below to subscribe to breezer!


powered by Bloglet